ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (30) கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
அந்த விசாரணைகள் தொடர்பான அனைத்து உண்மைகளையும் அறிந்த ஷானி அபேசேகரவை அழைக்காதது தனது தரப்புக்கு பாரிய பாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பார்ஸ், இது தமக்கு ஏற்பட்ட பாரிய குறைபாடு என நீதிமன்றில் ஒப்புக்கொண்டிருந்தார்.
இதன்படி, இந்த வழக்கில் சாட்சியமளிக்க ஷானி அபேசேகரவை அழைப்பதாக சட்டமா அதிபர் சார்பில் திலீப பீரிஸ், மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இது மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.