மத்திய வங்கி ஆளுநர் பெரும்பான்மை நம்பிக்கையினரின் வென்றார்!

0
140

இரண்டாவது இடத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிடித்துள்ளார் மற்றும் அவரது நம்பிக்கை 44.5 சதவீதமாகும்.

மேலும், சந்தர்ப்பம் கிடைத்தால், 56.8 வீதமான இலங்கையர்கள் வேறு நாட்டிற்கு இடம்பெயர விரும்புவதாகவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 18-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 18-29 வயதுக்கு இடைப்பட்ட இலங்கையர்களில் 77.2 வீதமானவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு நாட்டிற்கு இடம்பெயரத் தயாராக இருப்பார்கள், அதேவேளை 30 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்களில் 45.4 வீதமானவர்கள் வேறு நாட்டிற்கு இடம்பெயரத் தயாராக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த அறிக்கையின்படி, 60.5 சதவீதமான இலங்கையர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவை அங்கீகரித்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 18-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.

மேலும் இந்த அறிக்கையின் படி இலங்கையில் 79.1 வீதமானவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த பொருளாதார நிலைமையை விட தற்போதைய பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பு அக்டோபர் 21 முதல் 31 வரை நடத்தப்பட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here