Thursday, December 5, 2024

Latest Posts

புதிய களனி பாலத்திற்கு பூட்டு

அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இன்று (01) இரவு 9 மணி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும் இரண்டாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 8 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 11 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும் மூன்றாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 15 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும் புதிய களனி பாலத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸாரால் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.