ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ கைது

0
180

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (01) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்ததாகவும் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரது சட்டத்தரணி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் அவர் இன்று விஜயம் செய்தார்.

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த (30) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

கடந்த (29) கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், பணம் செலுத்திய பின் வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய பிரமுகர் முனையம் ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நீதிமன்ற உத்தரவின்படி 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்க வேண்டும்.

அதன்படி, அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில், இந்த போதகர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here