யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக சந்திரசேகர்

0
147

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன, கடற்றொழில், அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபருக்கு  பிரதியிடப்பட்ட கடிதம் மூலம்  அறியத்தரப்பட்டுள்ளது என்று மாவட்ட செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here