பல்கலைக்கழக நுழைவு வெட்டு புள்ளிகள் இன்று வெளியீடு!

0
252

2021ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதிய விண்ணப்பதாரர்களுக்கான பல்கலைக்கழக நுழைவு புள்ளி இன்று (டிச. 02) பிற்பகல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

கட்-ஆஃப் மதிப்பெண்களை UGC – www.ugc.ac.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம்.

இந்த ஆண்டு பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,400 இற்கும் மேற்பட்ட நிலையங்களில் உயர்தர பரீட்சை நடைபெற்றது.

மொத்தம் 236,035 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 36,647 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இம்முறை 149,946 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 21,551 தனியார் விண்ணப்பதாரர்களும் பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here