உலகின் வாழ்க்கைச்செலவு குறைந்த 10 நகரங்களில் கொழும்பும் இடம்பிடிப்பு!

0
90

Economist Intelligence Unit (EIU) ஆல் நடத்தப்படும் இந்த ஆண்டு உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பில் (WCOL) உலகின் குறைந்தளவு வாழ்க்கைச்செலவு உள்ள 10 நகரங்களில் கொழும்பு (இலங்கை) இடம்பிடித்துள்ளது.

பெங்களூர் (இந்தியா நகரம் 161 வது இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் டமாஸ்கஸ் (சிரியா), திரிபோலி (லிபியா) மற்றும் தெஹ்ரான் (ஈரான்) ஆகியவை முறையே 172, 171 மற்றும் 170 ஆகிய இடங்களில் உள்ளன.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு WCOL கணக்கெடுப்பு உயரும் பணவீக்க விகிதங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக EIU குறிப்பிட்டுள்ளது. வெனிசுலாவின் கராகஸ் அதிக பணவீக்க விகிதங்களை பதிவு செய்துள்ளது.

எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரி கொழும்பு மாத்திரமன்றி இலங்கை முழுவதிலும் உள்ள பிரஜைகள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த வேளையில், உள்நாட்டு பெற்றோல் விலை வியத்தகு உயர்வினால் இலங்கை முதல் ஸ்பெயின் வரை இத்தகைய போராட்டங்கள் காணப்படுவதாக WCOL கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இஸ்தான்புல் (துருக்கி) மற்றும் கொழும்பில் நாணயச் சரிவுகள் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயை மிகவும் விலையுயர்ந்ததாக ஆக்கியுள்ளன. உள்ளூர் நாணய அடிப்படையில் பெட்ரோல் விலை முறையே 148% மற்றும் 189% சதவீதம் உயர்ந்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here