க.பொ.த சாதரணப் பரீட்சையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் அதிகூடிய சிறப்பு பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் இருந்து க.பொ.த சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றிய 270 மாணவிகளில் 115 மாணவிகள் 9 பாடத்திலும் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ள அதேநேரம் 59 மாணவிகள் 8 பாடங்களிலும், 22 மாணவிகள் 7 பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ளனர்.
இதேபோன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 271 மாணவர்கள் தோற்றியதில் 74 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ளதோடு 73 மாணவர்கள் 8 பாடங்களிலும், 28 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்ற அதே நேரம் 19 மாணவர்கள் 6 பாடங்களில் ஏ தரச் சித்தியினைப் பெற்று சாதணை புரிந்துள்ளனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் 17 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தி எய்தியுள்ளதோடு 24 மாணவர்கள் 8 பாடங்களிலும், 24 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ தரச் சித்தியினையும் 19 மாணவர்கள் 6 பாடங்களில் ஏ தரச் சித்தியினை பெற்றுள்ளனர்.
இதேநேரம் மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளில் 9 மாணவிகள் 9 பாடங்களிலும், 6 மாணவிகள் 8 பாடங்களிலும், 6 மாணவிகள் 7 பாடங்களிலும், 5 மாணவிகள் 6 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்றுள்ளனர்.