அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கனுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவது உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள பல விடயங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் 75 வருடங்களை நெருங்கியுள்ள நிலையில், பிளின்கன் தனது ட்விட்டர் கணக்கில், இலங்கையர்களின் கூட்டாண்மை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளை முன்னேற்றுவதற்கான அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
N.S