ஜனவரி முதல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் மீண்டும் உயரும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரி திருத்தச் சட்டமூலமே இதற்குக் காரணமாக அமையுமென அறியமுடிகிறது.
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் பிரகாரம், பல்வேறு வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய திருத்தங்களின்படி, வருமான வரி 18%லிருந்து 36% ஆகவும், ஈவுத்தொகை மீதான வரி 15%லிருந்து 30% ஆகவும், ஏற்றுமதி வரி 15%லிருந்து 30% ஆகவும் அதிகரிக்கப்படும்.
N.S