நிதிக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிய திட்டம்

0
123

10வது பாராளுமன்றத்தின் நிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு சமகி ஜன பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிய புதிய ஜனநாயக முன்னணி (எரிவாயு சிலிண்டர்) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, மல்பாதையிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அது இடம்பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இன்று (டிசம்பர் 03) பாராளுமன்றக் கூட்டத்தில் குறித்த பிரேரணை முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் நிதிக் குழுவின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here