நேற்று (03) இரவு காலி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இந்த கார் மோதியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.