2023ஆம் ஆண்டில் ஒரு யூனிட் தடையில்லா மின்சாரத்திற்கு 56.90 ரூபா அறவிடப்படுமென எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதைய சராசரி கட்டணமாக ரூ. 29.14 அறவிடப்படும் நிலையில் பற்றாக்குறையாக ரூ.423.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. CEB தரவுகளின்படி 6,709,574 உள்நாட்டு நுகர்வோர் உள்ளனர்.
0-30 அலகுகளுக்கான நுகர்வோர் எண்ணிக்கை 1,460,828 ஆக உள்ளனர். ஒரு யூனிட்டுக்கு 8 ரூபா செலுத்தப்படுகிறது. 30-60 யூனிட்களை நுகரும் 1,683,172 நுகர்வோர் உள்ளனர். இவர்களிடம் ஒரு யூனிட்டுக்கு 10 ரூபா என்ற அடிப்படையில் அறவிடுகின்றனர்.
“60-90 யூனிட்களை பாவிக்கும் 1,702,515 நுகர்வோர் உள்ளனர். இவர்களிடம் 16 ரூபா அறவிடப்படுகிறது. 90-180 யூனிட்களை 1,559,131 நுகர்வோர் பாவிக்கின்றனர். இவர்களிடம் ஒரு யூனிட்டுக்கு 50 ரூபா அறவிடப்படுகிறது. 180+ யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரத்தை பாவிக்கும் 303,928 நுகர்வோர் உள்ளனர். இவர்களிடம் ஒரு யூனிட்டுக்கு 75 ரூபா அறவிடப்படுகிறது.
உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மின்சாரத்திற்கு சராசரி விலைக்கு மேல் செலுத்தும் அதே வேளையில், குறைந்த பிரிவினருக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது.
மானியத்துடன் கூடிய மின்சார விநியோகத்திற்கான எஞ்சிய நிதி திறைசேரியினால் ஏற்கப்படுகிறது.
எனவே, தனது தனிப்பட்ட கருத்துப்படி, ஒவ்வொரு மின்சார வாடிக்கையாளரும் ஒரு யூனிட்டுக்கு ரூ. 56.90 செலுத்த வேண்டும், அதே நேரத்தில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு நேரடி பண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்றார்.
N.S