இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு: 2600 பில்லியன் ரூபா அரச செலவு

Date:

2025 ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை இன்று வியாழக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரியவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இடைக்கால கணக்கறிக்கை மீது இன்றும் நாளையும் நாடாளுமன்றில் விவாதம் நடைபெறுவதுடன், நாளை மாலை இதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இடைக்கால கணக்கு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2600 பில்லியன் ரூபா முதல் நான்கு மாதங்களுக்கு இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கையின் பிரகாரம் முதல் நான்கு மாதங்களுக்கான அரச வருவாய் 1600 பில்லியனாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை கடன் வரம்பு 1000 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் மீண்டெழும் செலவீனங்களுக்காக 1000 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, வட்டிச் செலுத்தல் மற்றும் இதர கடன் சேவைகளுக்கு 1175 பில்லியன் ரூபாவும், மூலதன செலவுக்காக 425 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்றாலும், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதால் காலத்தாமதங்கள் ஏற்பட்டால் அடிப்படை கடன் பெறும் வரம்மை 4000 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கவும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறையாண்மை கடன் பத்திரங்கைளை வெளியிடவும் அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையில் ஏற்பாடுகளை செய்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...