லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவிக்கும் பிணை

0
114

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி ரஷி பிரபா ரத்வத்தே ஆகியோர் இன்று (05) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவிற்கு சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று அண்மையில், மீட்கப்பட்டிருந்தது.

இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட என தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 30 ஆம் திகதி, லொஹான் ரத்வத்தே, அந்தக் காரைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில், லொஹான் ரத்வத்தேவின் மனைவியான ரஷி பிரபா ரத்வத்தேயும் நவம்பர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here