Friday, April 26, 2024

Latest Posts

இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட ‘பிபிசி 100 பெண்கள் 2022’ பட்டியலில் இடம்பிடித்தார்!

‘பிபிசியின் 100 பெண்கள் 2022 இல்’ இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எகென்லிகொட பட்டியலிடப்பட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் ஆகும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவம் பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 2010 இல் அவரது கணவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனதில் இருந்து பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்காக சந்தியா எக்னெலிகொட குரல் கொடுத்தார்.

2017 ஆம் ஆண்டில், அவர் தனது பிரச்சாரங்கள் மற்றும் துறையில் மற்ற பணிகளுக்காக சர்வதேச தைரியமான பெண்கள் விருதையும் பெற்றார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், தனது கணவர் மறைந்ததில் இருந்து, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது, அன்புக்குரியவர்களை இழந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் மனைவிகளுக்கு உதவி வருகிறார்.

“நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மற்றவர்களுக்காக போராடும் ஒரு பெண், ஆக்கப்பூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டு, அவமானங்கள் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியில், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் மூலம் சவால்களை சமாளிக்கிறேன்”, என்று அவர் கூறியுள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.