தொடங்கொடை அருகே மோட்டார் சைக்கிள் பெரிய மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
நெஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த அசங்க சுஜித் அனுரகுமார மற்றும் சுப்பிரமணியம் பத்மராஜா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சடலங்களும் வில்பத்த பிரதேச வைத்தியசாலையிலும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
கட்டகஹேன, தொடங்கொடைக்கு அருகில், செங்குத்தான வீதியொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.