ஹங்வெல்லவை மையமாக வைத்து கப்பம் கோருதல் மற்றும் கொலை போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலக தலைவர் என கூறப்படும் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரை நாடு கடத்துவது தொடர்பில் அறிக்கை வெளியிட முடியாது எனவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வர்த்தகர் ஒருவரை அவரது வீட்டிற்கு வந்து சுட்டுக் கொன்ற சம்பவத்தின் மூளையாக செயற்பட்டவர் இவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.