தாமரை கோபுரத்தில் இன்று திறக்கப்படும் சுழலும் உணவகம்

0
66

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தில் அமைந்துள்ள சுழலும் உணவகம் இலங்கை இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்காசியாவிலேயே மிக உயரமான உணவகம் என்ற வகையில், கொழும்பு  தாமரை கோபுரம் வளாகத்தில் அமைந்துள்ள ‘ப்ளூ ஆர்பிட்’ உணவகத்தில் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை தங்க முடியும் என்றும், இது 27வது மாடியில் அமைந்துள்ளது என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

தாமரை கோபுரம் நிர்வாக பிரைவேட் லிமிடெட் மற்றும் சிட்ரஸ் நிறுவனம் இணைந்து சுழலும் உணவகத்தை நடத்துகின்றன. இது இரவும் பகலும் உணவருந்துவதற்கு திறந்திருக்கும். மதிய உணவுக்கு காலை 11:00 மணி முதல் பிற்பகல் 03:30 மணி வரையும் இரவு உணவிற்கு மாலை 6.30 முதல் இரவு 11.30 வரையும் திறந்திருக்கும் என்றும் திலும் அமுனுகம கூறுகிறார். இந்த உணவகத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தில் 80% தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்துக்கும் மீதி 20% சிட்ரஸ் நிறுவனத்துக்கும் பகிரப்படும். தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் 220 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து உணவகத்தை நடத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here