தட்டுப்பாடு இல்லாமல் சந்தைக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி

Date:

முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 முதல் 36 ரூபாய் வரை விற்பனையாகிறது.

எவ்வாறாயினும், நாட்டின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப முட்டையின் விலை தீர்மானிக்கப்படுவதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் தேவை அதிகரிக்கலாம் எனவும் அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 45 ரூபாவிற்கும் குறைவாகவே தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரிசி மற்றும் சோளத்தின் விலை உயர்வினால் முட்டை ஒன்றின் உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழி இறைச்சி உற்பத்தி உபரியாக இருப்பதால், கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜிக் குணசேகர தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து...

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு நேற்று (07) துபாயில்...

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...