கஜேந்திரகுமார் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலி

0
58

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் – போலவத்த பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5.40 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கு காரணமான வாகன சாரதி கைது செய்யப்பட்டு மாரவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த பெண் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலம் ஹலவத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here