யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்ட அறிவித்தல் மாவட்ட அரச அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான ம.பிரதீபனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.