ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான வேலைத்திட்டத்தினால் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன், இலங்கையின் விமான சேவைத்துறையும் பாரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
இரத்மலானை, மத்தள, பலாலி ஆகிய மூன்று விமான நிலையங்களின் மூலம் விமான நிலையமும் விமான நிறுவனமும் 26 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது.
மத்தள விமான நிலையத்தின் நட்டத்தை சுமார் 25 வீதத்தால் குறைத்து வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இம்மாதம் இதுவரையில் 66 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 5 வருடங்களில் 50 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் இலக்கை அடைய சுற்றுலா அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அனைவரும் ஒரே பாதையில் ஸ்திரமான நாட்டை நோக்கி பயணிக்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.