சென்னை வெள்ளத்தை பயன்படுத்தி நகைகள், பணம் கொள்ளை

0
176
Chennai, Dec 05 (ANI): People use a boat to shift to a safer place from a flooded area after heavy rainfall owing to Cyclone Michaung, in Chennai on Tuesday. (ANI Photo)

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4ஆம் தேதிகளில் கனமழை பெய்தது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.

இந்த வெள்ளத்தை பயன்படுத்தி தாம்பரத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

தாம்பரம் அருகே ராஜீவ் நகரில் உள்ள அடுக்குமாடி வீட்டில் உள்ள 6 வீடுகளின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here