குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது

0
103

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொழும்பு குற்றப்பிரிவினால் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முறைப்பாடு செய்தவருக்கு சாதகமாக விசாரணைகளை நடத்தியதாக கூறப்பட்டது.

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (டிசம்பர் 09) பிற்பகல் கைது செய்யப்பட்ட அவர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here