ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோர் தம்முடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் அநுர குமார திஸாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.