அமெரிக்காவுக்குள் நுழைய இருவருக்குத் தடை விதிப்பு

0
170

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தினம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதில் அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தால் எயார்பஸ் விமானங்களை அதிக விலைக்குக் கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்துவதற்காக இலஞ்சம் பெற்றார் என்று கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பான ஊழல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தார் என்று உதயங்க வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத்  தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here