இந்திய வீட்டுத்திட்டத்திற்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

0
77

4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 519 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில் வழங்கி வைக்கப்பட்டன.

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய அதிகார சபை ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.

இந்த காணி உறுதி வழங்கும் நிகழ்வில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, கண்டிக்கான இந்திய துணைத்தூதுவர் சரண்யா, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டீ.பங்கமுவ, அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here