தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேள்வி – பட்ஜெட் பற்றி?
“பட்ஜெட் ரொம்ப நல்லா இருக்கிறது இல்லையா? மக்கள் பொதுவாக இது நல்லது என்று சொல்கிறார்கள்.
“கேள்வி – இது இறுக்கமான பட்ஜெட் என்று மக்கள் கூறுகிறார்களே?…
“அப்படி இல்லை, இது ஒரு நேர்மறையான பட்ஜெட்.
“கேள்வி – தேர்தல் வரப்போகிறது என்கிறார்கள். அதற்கு எப்படி தயாராகி வருகிறீர்கள்?
“இல்லை, தேர்தல் வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் அந்த நம்பிக்கை இல்லை. இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் ரெண்டு வருஷம் இருக்கிறது அல்லவா?
“கேள்வி – நீங்கள் மக்களுக்கு என்ன செய்தியை கூறுகிறீர்கள்?”
பொறுமையாக இருக்கும்படி மக்களை கேட்டுக்கொள்கிறோம்…”
நேற்று (11) அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே
மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.