அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து!

0
75

தபால் சேவைகளை பேண வேண்டியதன் காரணமாக அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (டிசம்பர் 12) பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தபால் ஊழியர்களுக்கும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

தபால் தொழிற்சங்க முன்னணி இன்று மாலை 04.00 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. நேற்று (டிச. 11) முதல் இன்று நள்ளிரவு 12.00 மணி வரை, தபால் திணைக்கள கட்டுப்பாட்டு அலுவலகங்களின் உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 240 மணித்தியாலங்கள் மேலதிக நேரம் வழங்குவது உட்பட பல விடயங்களை மேற்கோள்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு அலுவலகங்களின் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 240 மணிநேர கூடுதல் நேரத்தைப் பெறுவதற்கான பொதுவான அனுமதியை வழங்க முடியாது, எனவே, தொடர்புடைய கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதல் நேரத்தை அங்கீகரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக தபால் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய பிரச்சினைகளுக்கும் சாதகமான தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தீர்மானங்கள் தொடர்பில் உடன்பாடு தெரிவிக்காமல் ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையினால், அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளையும் இரத்துச் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here