அமெரிக்க பிரபலங்களை லயத்துக் கோடிக்கே அழைத்து சென்ற திலகர்!

Date:

நீதிக்கும் இனத்துவ ஒப்பரவுக்குமான விசேட பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இருந்து வருகை தந்திருக்கும் டிசைரீ கோர்மியர் ஸ்மித் – மலையக அரசியல் அரங்கத்தினருக்குமான சந்திப்பு இன்று (12/12/2023) காலை நுவரெலியா பீட்ரூ தோட்டத்தில் இடம்பெற்றது.

மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தலைமையில் அரங்கத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார், வட்டாரத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜே.யோகநாதன், இளைஞர் சேவை அதிகாரி இரா. கனகராஜ் பீட்ரூ தோட்ட இளைஞர் கழக உறுப்பினர்கள் தோட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

தோட்ட ஆலய முன்றலில் அரங்கத்தின் செயலாளர் நா. கிருஷ்ணகுமார், சமூகப்பரிதிநிதி அந்தனி க்ரூஸ் ஆகியோர் ‘Hill country Tamils of Sri Lanka: Analysis of Leagal and Policy issues affecting labour and Governance Structure எனும் ஆய்வறிக்கையை வழங்கி வரவேற்பு அளித்தனர்.

தோட்ட ஆலயத்திற்கும், மக்கள் குடியிருப்புகளுக்கும், பீட்ரு தமிழ் வித்தியாலயத்துக்கும் அழைத்துச்செல்லப்பட்ட விசேட பிரதிநிதி ஸ்மித் அம்மையாருடன் பீட்ரு தோட்ட இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆங்கிலத்திலேயே பேசிக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமக்கான காணிப் பிரச்சனைகள், தொழில் வாய்ப்பு இன்மை, தொழில்கல்விக்கான வாய்ப்பு இல்லாமை முதலான விடயங்களை இளைஞர்கள் சுட்டிக் காட்டினர். மிகவும் வசதி வாய்ப்புகளற்ற லயன் வீடுகளின் கட்டமைப்பு அவற்றை தாமாகவே தரமுயர்த்திக் கொண்ட மக்களின் முயற்சி எதிர்காலத்தில் வீடு குறித்த அவர்களது எதிர்பார்ப்பு என மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

பாடசாலைக்கு விஜயம் செய்த ஸ்மித் அம்மையார் முன்னைய தோட்ட பாடசாலைக கட்மைமைப்பையும் தற்போதைய அரசாங்க பாடசாலை கட்டடத்தையும் பார்வையிட்டார். அதிபர் செல்வி. ஸ்டீபன் உள்ளதாகளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் உடன் கலந்துரையாடிதுடன் பாடசாலைப் பதிவேட்டிலும் கையொப்பம் இட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...