மஹிந்தவுக்கு ஏற்பட்ட நிலை

Date:

தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை பாரியளவில் குறைத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் (மனித வள முகாமையாளர்) வழங்கிய கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், பிரமுகர் பாதுகாப்பில் இருந்த அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை குறைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் பாரதூரமான நிலை என சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...