அரசுடன் பேசச் சென்றமை பச்சைத்துரோகம்!

0
179

இலங்கை அரசு, பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்தத் தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுக்குச் சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

‘”பேச்சுக்குப் போவதற்கு முன்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு போலி நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சமஷ்டியைத்தான் கேட்கப்போகின்றோம், அதை ஏற்காவிட்டால் வெளியேறுவோம் என்று விம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு, பேச்சில் சமஷ்டி தொடர்பில் அவர்கள் வாயே திறக்கவில்லை” என்றும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

“அரசு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அழைப்பு விடுத்திருக்கின்ற இந்த நேரத்திலே விடுதலைப்புலிகள் இயக்கம் யுத்தம் மௌனிக்கப்படாமல் ஓர் இயங்கு நிலையில் இருந்திருந்தால் எங்களுடைய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவும் தமிழ்ச்செல்வம் அண்ணனும் அந்த முழுப்பொறுப்பையும் ஏற்று ஒட்டுமொத்த தேசத்துக்காக இந்த நிலைமைகளைக் கையாண்டு இருப்பார்கள்” – என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here