டயானா கமகே மீதான பயணத் தடை நீக்கம்

Date:

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து குறித்த பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் 21 முதல் 23 வரை மற்றும் 2022 டிசம்பர் 28 முதல் 3 நாட்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் தமது பயண தடையை நீக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

இதன்படி வெளிநாட்டு பயணத்தடை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நீக்கப்படுவதாக கொழும்பு பிரதான நீதவான் அறிவித்துள்ளார்.

நவம்பர் 11 ஆம் திகதி சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது. இது நவம்பர் 17 வரை நீட்டிக்கப்பட்டது, பின்னர் 2022 டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...