Friday, December 27, 2024

Latest Posts

ஆசிய வலயத்தின் ஆயுத படையினர் சிறப்புத் திறன்களை கொண்டுள்ளனர் ; ஜனாதிபதி

உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இவ்வருட இறுதியில் உலகம் முழுவதும் உள்ள ஆயுத படையினர் முகம்கொடுக்கவிருக்கும் புதிய போக்குகள் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் நேற்று (14) நடைபெற்ற பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலைக் கல்லூரியின் 17 ஆவது பட்டமளிப்பு விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த தசாப்தத்திற்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, வெளிநாட்டுகளின் பாதுகாப்பு துறை அதிகாரிகளை இலங்கையின் பாடநெறிகளுக்காக உள்வாங்குவதன் மூலம் பாதுகாப்பு கற்கைகளை நடைமுறைக்கு அமைவானதாக மாற்றக்கூடிய வாய்ப்பு உள்ளதெனவும் தெரிவித்தார்.

ஆசிய வலயத்தின் ஆயுத படையினர் சிறப்புத் திறன்களை கொண்டுள்ளனர் என்றும், அந்த திறன்களுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பத்தையும் இணைப்பதால் நவீனமயமான பாதுகாப்பு படையொன்றை கட்டமைக்க முடியுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு உபாய மார்க்க விடயங்களை கற்பதற்கு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், கெடட் பயிற்சி பாடசாலை மற்றும் பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவி நிலைக் கல்லூரி ஆகிய நிறுவனங்கள் மூன்றும் பெரும்பணி ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல்களின் அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகளவில் அனுதாபத்தை தேடிக்கொள்வதற்கான சில நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

தற்போதைய சர்வதேச மோதல்களை சில ஊடகங்கள் மக்கள் கருத்தாடல் வரையில் கொண்டுச் சென்றிருப்பதால் உலக மக்களின் பாதுகாப்புக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும், பாரம்பரிய பாதுகாப்பு முறைமைகளிலிருந்து விடுபட்டு நிலவுகின்ற மோதல்களினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.