மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Date:

மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (14) இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது என்று மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே சடலம் சிக்கியுள்ளது.

இதையடுத்துச் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் உயர் பொலிஸ் அதிகாரி கைது

லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ்குமார்...

மஹிந்த சமரசிங்கவுக்கு அரசாங்கத்தின் உயர் பதவி?

அமெரிக்காவிற்கான இலங்கையின் தூதராக தற்போது பணியாற்றி வரும் மஹிந்த சமரசிங்கவுக்கு, அரசாங்கத்தின்...

காதலனை சேர மன்னார் யுவதி எடுத்த தைரியமான முடிவு!

இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருவோரின்...

வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை முன்னேற வேண்டும் – ஐ.நா

சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும்...