கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது?

Date:

பொலிஸாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொலிஸாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்ற மாபெரும் பிரச்சினை பொதுமக்களுக்கு இருக்கின்றது.

குறித்த போதைப்பொருட்கள் மீண்டும் போதைப்பொருள் வியாபாரிகளை சென்றடைகின்றது என்ற பிழையான கருத்தும் மக்களிடையே காணப்படுகின்றது.

அதேபோன்று இவ்வாறான சில சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.

ஆனால் இதன் பின்னர் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மிகவும் குறுகிய காலத்தில் அழித்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை திசை திருப்ப சஜித் அணி முயற்சி

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப்...

உதயங்க வீரதுங்கவிடம் CID விசாரணை

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க மற்றும் அவரது மனைவியிடமிருந்து...

கஞ்சா செய்கைக்கு இந்த அரசாங்கமும் அனுமதி!

கடுமையான அரசாங்க ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு முதலீட்டாளர்கள் ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிட அனுமதிக்கப்படுவார்கள்...

ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...