பருத்தித்துறையில் எலிக்காய்ச்சல் தாக்கம் வெகுவாகக் குறைவு

0
194

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்பட்டு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

ஓரிரு தினங்களில் வைத்தியசாலையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து நிலைமை சரியாகிவிடும் என்று வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறிக்கான ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்கு வர வேண்டும். சிகிச்சை எடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் தீவிரமாகுவதையும், இறப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம், குறைக்கலாம்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இதுவரை 66 பேர்  எலிக்காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் வந்து சிகிச்சை பெற்றுள்ளார்கள். தற்போது 32 நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுகின்றார்கள். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here