இலங்கையில் எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் பல தராசுகள் சரியான தரத்தில் இல்லை என குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மாவட்ட செயலாளர்களின் எடை மற்றும் அளவீடு பிரிவில் ஒவ்வொரு தராசும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றாலும், இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தராசுகள் அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றார்.
தராசை பயன்படுத்தி வர்த்தகர்கள் மேற்கொள்ளும் மோசடிகளை தடுக்க எடை அளவீடு திணைக்களத்துடன் இணைந்து செயற்திட்டமொன்றை உடனடியாக அமைக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பல வியாபாரிகள் விவசாயிகளின் பயிர்களை தொங்கும் வில் தராசில் வைத்து எடைபோடுவதாகவும், அதில் பெரும்பாலான தராசுகள் சரியான தரத்தில் இல்லாததால் விவசாயிகளுக்கு வரவேண்டிய வருமானத்தில் பெரும் தொகையை வியாபாரிகள் மோசடி செய்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
N.S