Sunday, September 22, 2024

Latest Posts

தினேஷ் ஷாப்டரின் கொடூர கொலையை அடுத்து பொலிஸாருக்கு அமைச்சர் டிரான் அலஸ் பிறப்பித்துள்ள உத்தரவு!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை அடக்குவதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொடூரமான மற்றும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக அறிந்துகொள்ள அமைச்சர் இன்று (16) காலை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரிகளை அழைத்தார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, விசேட பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனபால, குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, அமைச்சு ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுமித் குணரத்ன உட்பட இலங்கை பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கும்பல்களின் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சுமையாக மாறியுள்ளதால், இந்த பேரழிவு நிலையை ஒடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நபர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற குற்றவாளிகளை சமூகத்திலிருந்து அகற்றுமாறு மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் டிரான்அலஸ் உத்தரவிட்டார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.