CID பிரிவில் நீதி அமைச்சர் செய்த முறைப்பாடு

0
137

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (16) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

யாரோ அல்லது ஒரு குழுவினரோ, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், தான் பயன்படுத்தாத ‘கலாநிதி’ என்ற பெயரைப் பயன்படுத்தி, பொய்யான தகவல்களை முன்வைத்துள்ளதாக தனது முறைப்பாட்டு மனுவில் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், தனது பெயரை தவறாகப் பயன்படுத்திய பாராளுமன்ற இணையத்தளத்தில் தொடர்புபடுத்திய தொடர்பாடல் திணைக்களம் மன்னிப்புக் கோரி கடிதம் அனுப்பியுள்ளது. 13ம் திகதி மற்றும் பத்திரிகை ஊடகங்களில் அவரது பெயருக்கு முன்னால் தவறான அறிமுகம் சரி செய்யப்பட்டு அது குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த தவறுகளை நியாயமாக அறிமுகப்படுத்தி தனக்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்திய நபரை கண்டு பிடிக்க வேண்டியது அவசியமானதனால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவியை நாடியதாக அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here