ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் மொத்தம் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று தெரிவித்துள்ளார்.
பொரளை பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் அளித்தவர்களில் ஷாப்டரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸ் ஆகியோரும் அடங்குவர்.
இதேவேளை, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல வழங்கிய உத்தரவுக்கு அமைய பிரையன் தோமஸின் வெளிநாட்டு பயணங்கள் நேற்றுமுதல் தடை செய்யப்பட்டன. இதற்கிடையில், தாமஸின் மொபைல் போன் சிஐடி காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
N.S