பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைகளை உடனடியாக உள்வாங்குமாறு கோரி இன்று (18) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பட்டதாரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் பணிக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும், இது தொடர்பில் உறுதியான தீர்மானத்தை எடுப்பதை அவர்கள் ஒத்திவைப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே, இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.












புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன