புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று பதவியேற்றார்.
புதிய கடற்படைத் தளபதி பதவியேற்றதன் பின்னர் பாரம்பரியமாக ஜனாதிபதியைச் சந்தித்து ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
இதேவேளை, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்கவை சந்தித்து சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
N.S