யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்!

0
56


யாழ்., பலாலி வடக்கு, அன்ரனிபுரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் இன்னமும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

49 வயதுடைய இராயப்பு றொபேட் கெனடி என்ற மீனவரே காணாமல்போயுள்ளார் என்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலிட்டித் துறைமுகத்திலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில், காணாமல்போனதாகக் கூறப்படும் மீனவரின் படகு கவிழ்ந்திருந்த நிலையில் கடற்றொழிலாளர்கள் மீட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் மீனவர் காணாமல்போன நிலையில், அவர் பணித்த படகு நேற்று மீட்கப்பட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here