எட்கா ஒப்பந்தம் தொடர்பான அரசின் நிலைப்பாடு

Date:

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை அல்லது எட்கா உடன்படிக்கையில் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை அல்லது அது எந்த காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பல தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாக வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“இரு நாடுகளுக்கு இடையே முன்பு ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி நாங்கள் செயல்படுகிறோம். அதை புதுப்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை சந்தை விரிவாக்கத்துடன் புதுப்பித்து முன்னேற்றுவோம் என்று நம்புகிறோம்.

மேலும் எட்கா தொடர்பான விவாதத்தை தொடருங்கள் இல்லையேல் இந்திய விஜயத்தின் பின்னர் எட்கா ஒப்பந்தம் அமுல்படுத்தப்படும்… அது எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம். நாங்கள் எந்த நேரத்திலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம் என்பதுதான் எங்களது அடிப்படைக் கொள்கை..”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...