ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதற்கு உரிய தரப்பினருக்கு மக்கள் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மக்கள் தமது வாக்குரிமைக்காக எழுந்து நிற்கும் வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது என கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பொதுத் தேர்தலையோ இஷ்டத்துக்கு ஒத்திவைக்க முடியாது என இங்கு தெரிவிக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சட்டங்கள் இன்னும் அமுலில் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டியது பொறுப்பு வாய்ந்த தரப்பினரின் பொறுப்பு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.