Saturday, October 5, 2024

Latest Posts

வவுனியா வடக்குல் இனத்மின் முதுகில் குத்தியது யார்? ந.லோகதயாளன்

வவுனியா வடக்கு பிரதேச சபையில் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தவறான முடிவு காரணமாக  சிங்களக் கட்சியின் வசமானது. 

26 உறுப்பினர்களை உடைய  வவுனியா வடக்கு பிரதேச சபையானது 2018ஆம் ஆண்டுமுதல் த.தே.கூட்டமைப்பு நிர்வாகத்தில் இருந்த சபையின் வரவு செலவுத் திட்டம் இரு தடவையும் தோற்கடிக்க முற்பட்ட சமயமே அந்தச் சபை சிங்களப் பெரும்பான்மை வசம் செல்லும் ஆபத்து உள்ளது எனப் பல தடவை சுட்டிக் காட்டப்பட்டது. இருந்தபோதும் அங்கே வரவு செலவுத் திட்டம் இரு தடவையும்  தோற்கடிக்கப்பட்டது.

தவசாளராக வேறு ஒருவர் பிரேரிக்கப்பட்டால் ஆதரவு நல்குவோம் என முன்னணி தெரிவித்தது. யாழ்ப்பாணம் மாநகர சபையிலே இ.ஆனலட்டை மாற்றாத காரணத்தினால்த்தான் எதிர்த்து வாக்களித்தோம் என முன்னணி கூறியதன் அடிப்படையில் கூட்டமைப்பு வவுனியா வடக்கு பிரதேச சபையிலே தவிசாளரை மாற்றி பிரேரித்தது. இருந்தபோதும் அஞ்சப்பட்ட விடயமே நடந்தேறிவிட்டது. 

வவுனியா வடக்கு சபை  26 உறுப்பினர்கொண்டுள்ள நிலையில் த.தே.கூட்டமைப்பு 8 ஆசணங்களும், முன்னணி மற்றும் கூட்டணி தலா 3 ஆசணங்கள், பெரமுன 5 ஆசணங்கள், ஐ.தே.க 03, சுதந்திரக் கட்சி 02 , ஜே.வி.பி.01, சுயேச்சைக் குழுவிற்கு 1 ஆசணங்கள் என்ற அடிப்படையிலேயே 26 ஆசணங்கள் உள்ளன.

இதன் அடிப்படையில் 22 ஆம் திகதி இடம்பெற்ற புதிய தவிசாளருக்கான தேர்வில் பெரமுனவைச் சேர்ந்த ஒருவரைத் தவிர ஏனைய 25 பேரும் சபைக்குச் சமூகமளித்த சமையம் வாக்கெடுப்பானது பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பிலா அமைய வேண்டும் என்பதற்கான வாக்கெடுப்பின்போது த.தே.கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் முன்னணியின் 3 உறுப்பினர்களும் கூட்டணியின் அதாவது சுரேஸ் அணியைச் சேர்ந்த சிவசக்தி ஆனந்தனின் உறுப்பினர்கள் மூவரில் ஒருவர் மட்டுமே பகிரங்க வாக்கெடுப்பை கோரியபோதும் சிவசக்தி ஆனந்தனின் இருவர் உட்பட எஞ்சிய 13 பேரும் இரகசிய வாக்கெடுப்பை கோரினர். இதன் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்த முடிவானது.

இதனால் குறித்த ஆபத்து உடனடியாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது ஜே.வி.பியுடன் தொலைபேசியில் உரையாடப்பட்டது. இதன்போது பெரமுனவிற்கு ஆதரவாக ஜே.வி.பியை வாக்களிக்காமல் தடுப்பதகவும் ஆனால் இன ரீதியாக மாற அவர் மறுப்பதனால் நடுநிலை வகிப்பார் என ஜே.வி.பி உறுதியளித்தது. ஐ.தே.கட்சியில் உள்ள மூவரில் ஒருவர் ரிசாட் பதியுதீன் அணியை சேர்ந்தவர் என்பதனால் ரிசாட் பதியுதீனிடமும் தொடர்பு கொண்டபோது அவர் பெரமுனவிற்கே வாக்களிக்கப்போகின்றார் இருப்பினும் அது கட்சி ரீதியிலான முடிவு அல்ல. அவர்கள் அவரை வளைத்து விட்டனர் என்பதனை கோடி காட்டினார். இதன் அடிப்படையில் இரகசிய வாக்களிப்பின்போது பெரமுன மற்றும் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் தலா 12 வாக்குகளைப் பெற்றனர். ஒருவர் எவருக்குமே வாக்களிக்காத நிலமை காணப்பட்டது. இரு போட்டியாளர்களும் சம வாக்குப் பெற்றதனால் திருவுலச் சீட்டு உருட்டப்பட்டபோது அது பெரமுனவிற்கு சாதகமாக அமைந்தது. இதனால் வவுனியா வடக்கு பிரதேச சபை தமிழ்க் கட்சிகளின் பிடியில் இருந்து சிங்களக் கட்சிக்கு கை மாறிவிட்டது. இந்தச் செயலிற்கு சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் கூட்டுக் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியே அதிக பொறுப்பேற்க வேண்டும். அடுத்த பங்கு முன்னணிக்கும் உண்டு. ஏனெனில் இரு தடவையும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் மூலமே புதிய தவிசாளர் தேர்விற்கான கதவு திறக்கப்பட்டதூ. அதன் பிரகாரம் வரவு செலவுத் திட்டத்தின்போது முன்னணியும் எதிர்த்தே வாக்களித்தது. 

ஆக மொத்தம் ஓர் இனத்தின் இருப்பே கேள்விக் குறியாகும் ஒரு சபையின் வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் புதிய தவிசாளர் தேர்வு ஆகியவற்றில் மௌனமாக இருந்த கமிழ் மக்கள் கூட்டணியின் தலைவலும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மாநகர சபை வரவு செலவுத் திட்டத்தின்போது மட்டும் விடப்பட்ட அறிக்கை உண்மையில் பொது நலம் சார்ந்ததுதானா என எழுப்பப்பட்ட கேள்விக்கான விடையாகவும் இது அமைகின்றது. 

இவ்வாறு ஒரு இனத்தின் இருப்பே கேள்விக்குறியாகும் செயலிற்கு வாக்களித்துவிட்டு கட்சி அரசியலிற்காகவும் வெளியாரைத் திருப்திப்படுத்தி வாக்கை பெறுவதற்காக அறிக்கை விடும் உண்மை முகங்கள் இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

வவுனியா வடக்கு தவிசாளர் தேர்வில் ஜே.வி.பி உறுப்பினருக்கு இருந்த உணர்வுகூட தமிழ் தேசியம் பேசிய கட்சி ஒன்றிடம் இல்லாமல்போனது தொடர்பில் வவுனியா மக்கள் நினைவில் இருத்திக்கொள்ளப்பட வேண்டிய விடயமும் ஆகும். 

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.