பாரதப் பிரதமிரிற்கான கடித வடிவம் மாற்றப்பட்டது

0
104

தமிழ்க் கட்சிகள் ஒண்றினைந்து பாரதப் பிரதமரிடம் முன் வைக்கவுள்ள  கூட்டு அறிக்கையின் பொருள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த 3 பக்க கோரலின்
தலைப்பு 13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல் என இருந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சி முன் வைத்த 8 பக்க முன்மொழிவின் பிரகாரம் தற்போது “தமிழ் பேசும் மக்களின் அரசியல்  அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்”  என மாற்றப்பட்டுள்ளது.

இதேநேரம்  மாற்பட்ட புதிய வரைவுதயாரிக்கப்பட்டு இறுதி வடிவம் பெற்றபோது ஏற்கனவே தயாரிக்கப்பட்டிரிந்த 3 பக்க அறிக்கையில் இருந்த 3 பந்திகள் உள் வாங்கப்பட்டபோதும்
நோகம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டாலும் 1987ஆம் ஆண்டு மூன்று முக்கிய தலைவர்களுடன் ஒப்பமிட்ட கடுதத்திற்கு மெரணாகவோ அல்லது தமிழ் மக்களின் தற்போதைய கோரிக்கைக்கு மாறாகவோ இருப்பின் நான் ஒப்பமிடேன் என்றே கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆவணம்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here