“மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்கூடாது, முயற்சிகள் எடுத்து கல்வி துறையில் முன்னேற்றம் அடையவேண்டும்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மா/வ/ ஹைபொரஸ்ட் இல 03. தமிழ் வித்தியாலயத்தின் கடந்த வருடம் க.பொ.த சாதாரன தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலையின் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதன்போது சிறப்பு அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் கலந்துக்கொண்டு உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு அறிவுரை வழங்கினார்.
“இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்காக எனது அமைச்சிக்கு 305 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் சாதாரன தரபரீட்சை முடிந்ததோடு பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர் இதனால் பெரும்பாலான மாணவர்களின் கல்வி பாதிப்படைகின்றனர்.இதனால் எதிர்காலத்தில் மாணவர் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
அத்தோடு மலையகத்தில் 800 மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுகின்றன. அப்பாடசாலைகளில் சுகாதாரம், குடிநீர் ,வி ளையாட்டு போன்ற துறைகளில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்படுகின்றன. இருந்தும் மாணவர்கள் பரீட்சையில் சித்திபெற்று உயர்கல்விக்கு செல்லுகின்றனர் அவர்களையும் பாராட்டவேன்டும்.
மாணவர்கள் தோல்வியை கண்டு துவண்டுவிடாது முயற்சிகள் எடுத்து கல்வி துறையில் முன்னேற்றம் அடையவேண்டும்.” – என்றார்.